பிரான்ஸில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – சிறைச்சாலைகளில் நிரம்பி வழியும் கைதிகள்
பிரான்ஸில் இதுவரையில் இல்லாத அளவு சிறைச்சாலைகளில் கைதிகள் நிரம்பிவழிகின்றனர்.
ஒவ்வொரு சிறைச்சாலைகளிலும் அதன் அளவை விட அதிகமாகவும், சில இடங்களில் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகவும் கைதிகள் சிறைவைக்கப்படுட்ள்ளனர்.
பாரிஸில் உள்ள சிறைச்சாலையில் 592 கைதிகளுக்கான இடங்கள் மாத்திரமே உள்ள நிலையில், அங்கு 1,033 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது நிலைப்பாடுகள் குறித்து அறிந்து கொண்டார். கைதிகளுக்கு தேவையன மெத்தைகளை உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
அதேவேளை, நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளையும் சேர்த்து மொத்தமாக 76,766 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். சென்ற ஆண்டை விட 4,415 கைதிகள் அதிகமாகும்.
அதேவேளை, பிரான்ஸில் 61,629 கைதிகளுக்கு போதுமான சிறைச்சாலைகளே உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(Visited 24 times, 1 visits today)





