ஜெர்மனியில் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதில் நெருக்கடி நிலை
ஜெர்மனியில் நாடு கடத்துவதில் பல்வேறு சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புகலிட கோரிக்கையாளர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்த போதும், அது தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் செம்டெம்பர் மாதம் வரையில் 38328 புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களில் 23610 பேரை நாடு கடத்த முடியாத நிலையில் அதிகாரிகள் திண்டாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த புகலிட கோரிக்கையாளர்களினால் வழங்கப்பட்ட முகவரியில் அவர்கள் வசிக்காமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் மற்றுமொரு பகுதியில் வசித்துக் கொண்டு, மற்றுமொரு முகவரியை வழங்கியமையே நாடு கடத்தலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தேடிக் கண்டுபிடித்து அவர்களை நாடு கடத்துவது என்பது உடன் சாத்தியப்படக் கூடியதொன்றல்ல என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.