ஜெர்மனியில் புகலிடம் கோருவோருக்கு நெருக்கடி – உடன் கைது செய்ய நடவடிக்கை
ஜெர்மனியின் தேவாலயங்களில் புகலிடம் கோருவோரை உடன் கைது செய்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனில் மனிதாபிமான அடிப்படையில் நடைமுறையிலுள்ள சட்டத்தை சிலர் துஷ்பிரயோகம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தேவாலயத்தில் புகலிடம் கோரும் வெளிநாட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஜெர்மனியில் புகலிடம் மறுக்கப்பட்ட வெளிநாட்டவர் ஒருவர், தேவாலயத்தில் தஞ்சம் அடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு சுவீடனுக்கு நாடு கடத்தப்பட்டார்.
எனினும் அவர் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் நுழைந்து ஹம்பேர்க்கில் உள்ள தேவாயலம் ஒன்றில் புகலிடம் கோரியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவிடனிலிருந்து வந்து புகலிடம் கோரிய ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த அகதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மீண்டும் சுவிடனுக்கு நாடு கடத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய ஷெங்கன் விதிகளின் படி ஜெர்மனியில் புகலிடம் கோரிய நபர், ஏற்கனவே அடைக்கலம் பெறும் நபர் ஷெங்கத் நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டில் புகலிடம் கோரியிருந்தால் அந்த நாட்டுக்கு நாடு கடத்துவது சட்டமாகும்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நபரை சுவீடனுக்கு நாடு கடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.