அமெரிக்க ஜனாதிபதியின் வரித் திட்டங்களால் முக்கிய நிறுவனங்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி

மெக்சிக்கோவில் தயாரிக்கும் சில வீட்டு உபயோகப் பொருள்களை அமெரிக்காவில் தயாரிப்பது குறித்து யோசித்து வருவகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிப்ரவரி 1ஆம் திகதி முதல் கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கக் கூடும் என்பதால் அந்நிறுவனங்கள் அவ்வாறு பரிசீலிப்பதாகக் கூறப்படுகிறது.
Samsung நிறுவனம் துணி துவைத்து உலர வைக்கும் இயந்திரங்களையும், LG நிறுவனம் குளிர் பதனப் பெட்டிகளையும் மெக்சிக்கோவிற்குப் பதிலாகத் தத்தம் அமெரிக்க தொழிற்சாலைகளில் தயாரிப்பது பற்றி சிந்தித்து வருகின்றன.
நிலவரத்தையும், சந்தையின் போக்கையும் கூர்ந்து கவனித்து உரிய முடிவுகளை எடுக்க இரு நிறுவனங்களும் எண்ணுவதாக தெரியவந்துள்ளது.
(Visited 21 times, 1 visits today)