ஐரோப்பா

பிரித்தானியாவில் முடங்கவுள்ள வைத்திய சேவை!

பிரித்தானியாவில் வரும் வசந்த காலம் வரை ஜுனியர் மருத்துவர்கள் ஒவ்வொரு மாதமும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் மருத்துவ சங்கம்  தனது வேலைநிறுத்த உத்தரவை நீட்டிக்க அடுத்த வாரம் வாக்கெடுப்பு நடத்தவுள்ளதாக தெரியவருகிறது.

ஜூனியர்  மருத்துவர்கள்,   ஆலோசகர்களுடன் “ஒருங்கிணைந்த நடவடிக்கை” குறித்தும் பரிசீலிப்பதாகக் கூறினர்.

வேலைநிறுத்தத்தைத் தொடர உறுப்பினர்கள் வாக்களித்தால், 2024 மார்ச் மாதம் வரை மாதத்திற்கு மூன்று நாட்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது ஊதியம் தொடர்பாக அரசாங்கத்துடனான சர்ச்சையில் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!