செய்தி

ஐபிஎல் முடிந்த கையோடு குக் வித் கோமாளி ஷோவில் கலக்கிய கிரிக்கெட் வீரர்கள் !!!

ஐபிஎல் தொடரில் கலக்கிய இந்திய வீரர்கள் இருவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ள சம்பவம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

சின்னத்திரையில் மிகவும் பேமஸ் ஆன ரியாலிட்டி ஷோக்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் ஒன்று.

பொதுவாக சமையல் நிகழ்ச்சி என்றாலே சீரியஸ் ஆன ஒன்றாக இருக்கும், ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதற்கு அப்படியே எதிர்மறையானது.

இந்நிகழ்ச்சியில் கோமாளிகளுடன் சேர்ந்து குக்குகள் செய்யும் காமெடி அலப்பறைகள் தான் ஹைலைட். இதுவரை குக் வித் கோமாளில் நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிவடைந்து உள்ளன.

தற்போது குக் வித் கோமாளில் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதலில் 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வைல்டு கார்டு எண்ட்ரியும் வந்தது.

அந்த வகையில் நாகேஷின் பேரன் கஜேஷ் மற்றும் சினிமாவில் கலை இயக்குனராகவும், நடிகராகவும் கலக்கி வரும் கிரண் ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டனர்.

இதில் நாகேஷின் பேரன் கஜேஷ், தான் பங்கேற்ற முதல் வாரத்தில் அட்வாண்டேஜ் டாஸ்க்கெல்லாம் ஜெயித்து அசத்தி இருந்தார்.

ஆனால் அடுத்த வாரமே அவர் எலிமினேட் ஆகி வெளியேறினார். இப்படி திடீர் டுவிஸ்ட்கள் நிறைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், சிம்பு, ஆர்.ஜே.பாலாஜி என ஏராளமான சினிமா பிரபலங்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு இருக்கின்றனர்.

ஆனால் தற்போது முதன்முறையாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் இருவர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உள்ளனர்.

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவர் தான் குக் வித் கோமாளியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உள்ளனர்.

இவர்கள் கலந்துகொண்ட எபிசோடு அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது.

(Visited 15 times, 1 visits today)

MP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி