ஆட்டங்கண்ட துருக்கி விமானம் – விமானிக்கு நேர்ந்த கதி

Turkish Airlines விமானம் கடுமையாக ஆட்டங்கண்டதில் விமானி ஒருவருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.
விமானம் துருக்கியேவின் இஸ்தான்புல் (Istanbul) நகரில் இருந்து இஸ்மிர் (Izmir) நகரத்திற்குப் புறப்பட்டது. விமானத்தில் இருக்கும் அனைவரும் தங்களுடைய இருக்கைவாரை அணியும்படி விமானி எச்சரிக்கை விடுத்தார். விமானம் கீழே இறங்கியதால் அவர் அவ்வாறு செய்தார்.
அவர் எச்சரித்த கொஞ்ச நேரத்தில் விமானம் ஆட்டங்கண்டதாகத் துருக்கியேவின் Hürriyet செய்தி நிறுவனம் தெரிவித்தது. காயமடைந்த சிப்பந்தி வேலையில் சேர்ந்து 2 மாதங்கள் தான் ஆகின்றன.
விமானம் ஆட்டங்கண்டபோது அவர் விமானத்தின் உள்ளே மேலும் கீழும் தூக்கியெறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
விமானம் இஸ்மிரில் தரையிறங்கியவுடன் பாதிக்கப்பட்ட விமானி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
(Visited 32 times, 1 visits today)