65 போர்க் கைதிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம்
65 போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய விமானம் உக்ரைன் எல்லை அருகே விழுந்து நொறுங்கியதில் மர்மம் எழுந்துள்ளது.
ஏனெனில், விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியதா அல்லது ஏவுகணை தாக்குதலா என்பது குறித்து விவாதம் நடந்து வருகிறது.
விபத்தின் போது, மூன்று ரஷ்ய அதிகாரிகள் மற்றும் 06 பணியாளர்களும் அதில் இருந்தனர்.
விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸ்லென்ஸ்கி, உக்ரைன் கைதிகளின் உயிருடன் ரஷ்யா விளையாடி வருவதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்ய காவலில் உள்ள உக்ரேனிய கைதிகளை பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சியின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
எனவே இந்த விபத்து குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உக்ரைன் அதிபர் கூறுகிறார்.
(Visited 11 times, 1 visits today)