உலகை அச்சுறுத்திய COVID – மக்களின் ஆயுளில் மாற்றம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

உலகை அச்சுறுத்திய COVID-19 நோய்த்தொற்றின் முதல் 2 ஆண்டுகளில் மக்களின் ஆயுள் சுமார் 2 ஆண்டுகள் குறைந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் Institute for Health Metrics and Evaluation எனும் சுகாதாரத் தகவல், மதிப்பீட்டு நிலையம் ஆய்வு நடத்தியது.
2020ஆம் ஆண்டுக்கும் 2021க்கும் இடைப்பட்ட காலத்தில் 84 விழுக்காட்டு நாடுகளில் ஆயுள் குறைந்ததாகத் தெரியவந்தது.
மரண விகிதம் அதிகரிப்பு, 15 வயதுக்கும் மேற்பட்டவர்களிடையே..
பெண்கள் – 17%
ஆண்கள் – 22%
கடந்த 50 ஆண்டுகளில் போர்கள், இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுத்திய தாக்கத்தைவிட COVID-19 ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.
2020க்கும் 2021க்கும் இடைப்பட்ட காலத்தில் COVID-19 காரணமாக 15.9 மில்லியன் பேர் மாண்டதாக நம்பப்படுகிறது. ஆய்வு முடிவு The Lancet சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.
(Visited 16 times, 1 visits today)