COVID 19 – அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து ரிஷியிடம் விசாரணை
பிரித்தானியாவில் கொவிட் பரவிய போது வேலையின்மையை கட்டுப்படுத்தல் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை பாதுகாப்பதிலேயே முக்கிய கவனம் செலுத்தியதாக முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று காலத்தில் அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து கொவிட் விசாரணை குழு ரிஷி சுனக்கிடம் விசாரணைகளை மேற்கொண்டது.
இதன்போதே வேலையின்மையை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சில நடவடிக்கைகள் அறிவியல் ஆலோசகர்களுடன் கலந்தாலோசிக்காமல் இடம்பெற்றது என்ற குற்றச்சாட்டுக்களையும் அவர் மறுத்துள்ளார்.
அந்த நடவடிக்கைகள் வேலை இழப்புகளைத் தடுக்கவும் பொருளாதார பாதிப்புகளை குறைக்கவும் உதவியதாக அவர் கூறியுள்ளார்.
வேலையின்மை மற்றும் பொருளாதார தாக்கம் போன்ற நிச்சயமற்ற சூழ்நிலைகளில், வேலையின்மையை கட்டுப்படுத்துவதற்கே முன்னுரிமை அளித்ததாக முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் விசாரணையில் மேலும் தெரிவித்துள்ளார்.





