சீனாவில் ஊழியரை பணி நீக்கம் செய்த நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்
சீனாவில் மருத்துவ விடுப்பில் இருந்த ஊழியரை பணியில் இருந்து நீக்கியதுடன், அபராதம் விதித்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென் என்ற ஊழியர் கால் மற்றும் முதுகு வலியால் அவதிப்பட்ட நிலையில், முறையாக மருத்துவ விடுப்புக்கு விண்ணப்பித்து ஓய்வு எடுத்துள்ளார்.
அதற்கான மருத்துவ சான்றிதழையும் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.
எனினும் அவர் பொய்யான தகவலை வழங்கி விடுமுறை எடுத்ததாகக் குற்றம் சாட்டிய நிறுவனம், ஊழியரை பணி நீக்கம் செய்ததுடன், அபராதமும் விதித்துள்ளது.
விடுமுறையில் இருந்த காலப்பகுதியில் நீண்ட தூரத்திற்கு ஊழியர் நடந்து சென்றதற்கான ஆதாரம் உள்ளதாக நிறுவனம் தெரிவித்திருந்தது.
எனினும் நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு எதிராக நீதிமன்றில் பாதிக்கப்பட்ட சென் வழக்குத் தொடுத்தார்.
வழக்கினை விசாரித்த நீதிமன்றம், சட்டவிரோதமான முறையில் சென் பணி நீக்கம் செய்யப்பட்டதாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதற்கமைய பாதிக்கப்பட்ட சென்னுக்கு 118,779 யுவானை இழப்பீடாக நிறுவனம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.





