ஐரோப்பா

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்தது!

ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் இங்கிலாந்து அரசின் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

பிரித்தானியாவில் அண்மைக்காலமாக சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், கால்வாய் மூலம் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு புகலிடக்கோரிக்கையாளர்கள் அடைக்கலம் கோருகின்றனர்.

இந்நிலையில் இவ்வாறு வருபவர்களை ரூவாண்டாவிற்கு அனுப்பும் திட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் முன்வைத்தது. இது குறித்து நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்றன.

இந்நிலையில்,  நீதிமன்றத்தின் தலைவர் லார்ட் ரீட் கூறுகையில், “புகலிடக்கோரிக்கையாளர்களை ரூவாண்டாவிற்கு அனுப்புவது உண்மையான ஆபத்து என விபரித்துள்ளார். அவர்கள் ருவாண்டாவில் இருந்து தப்பி வந்த சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படலாம் எனக் கூறினார்.

2022 இல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, சட்டரீதியான சவால்களால் இந்தத் திட்டம் முறியடிக்கப்பட்டது. மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதற்கு முன், உயர்நீதிமன்றம் அதை சட்டப்பூர்வமாக தீர்ப்பளித்தது.

தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்