செய்தி

நடிகை ஷில்பா ஷெட்டி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்

தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷில்பா ஷெட்டி. இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார்.

2013 ஆண்டு சல்மான் கானுடன் இணைந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஷில்பா ஷெட்டி பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் பட்டியல் சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் ஷில்பா ஷெட்டி பேசியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பட்டியல் சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக 2017 ஆம் ஆண்டு ஷில்பா ஷெட்டி மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதியப்பட்டது.

இந்நிலையில், ஷில்பா ஷெட்டி மீது பதிவான SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஒரு சமூகத்தை இழிவு செய்ய வேண்டும் என திட்டமிட்டு, அந்த வார்த்தையை அவர் குறிப்பிடவில்லை என நீதிபதி அருண் மோங்கா கருத்து தெரிவித்தார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!