இஷாரா செவ்வந்தியை 90 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
பாதுகாப்பு அமைச்சகம், ‘இஷாரா செவ்வந்தியை 90 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கணேமுல்ல சஞ்சீவவின்’ கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த ‘இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் அவருடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்ஷி உள்ளிட்ட குழுவினரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் அணைவரும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், காவல்துறையினர் அவர்களிடம் தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதில் பல திடுக்கிடும் தகவல்களை இஷாரா செவ்வந்தி கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல்துறை அதிகாரிகள் அனுமதி கோரியிருந்த நிலையில், அதற்கு நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.





