ஹசீனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
கடந்த ஆகஸ்ட் மாதம் பொதுமக்கள் போராட்டத்தால் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்ற வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷில் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
நாட்டை விட்டு தப்பிச் சென்ற அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் உட்பட மேலும் 45 பேரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஷேக் ஹசீனா 1996 ஆம் ஆண்டு முதல் பிரதமராக பதவியேற்று 2009 ஆம் ஆண்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து ஐந்தாவது முறையாக ஆட்சியில் இருந்துள்ளார்.





