தினேஷ் ஷாஃப்டரின் சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட நீதிமன்றம் உத்தரவு
வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலத்தை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (சிஐடி) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஷாஃப்டரின் மரணம் தொடர்பான அறிக்கையைத் தொகுக்க நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர்கள் குழு விசாரணைகளை முடித்துவிட்டதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
மே மாதம் கொழும்பு, பொரளை பொது மயானத்தில் தினேஷ் ஷாஃப்டரின் பூதவுடல் தோண்டி எடுக்கப்பட்டது.
சந்தேக மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பரில் பொரளை பொது மயானத்தில் காருக்குள் கட்டப்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் ஷாஃப்டர் கண்டுபிடிக்கப்பட்டார்.
52 வயதான வர்த்தகர் பின்னர் கொழும்பு பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.