இலங்கை

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை வௌியிட்ட ஆசிரியருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான I மற்றும் II வினாத்தாள்கள் வௌியானது தொடர்பில் அம்பாறையில் உள்ள பிரபல அரச பாடசாலையின் உயர்தர விவசாய விஞ்ஞான ஆசிரியரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.

52 வயதுடைய சந்தேகத்திற்குரிய ஆசிரியர் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புகளையும் நடத்தி வந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் விவசாய விஞ்ஞானம் I வினாத்தாள் கேள்விகளை ஜனவரி 8 ஆம் திகதியும், விவசாய விஞ்ஞானம் II வினாத்தாள் கேள்விகளை 2024 ஜனவரி 10 ஆம் திகதியும் வெளியிட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான I மற்றும் II வினாத்தாள்களை தனது வீட்டில் வைத்து அவரது சொந்தக் கையெழுத்தில்  எழுதப்பட்டதையும் போலீசார் அவரது வீட்டில் கண்டுபிடித்துள்ளனர்.

ஆசிரியரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே குறித்த பாடத்திற்குரிய பரீட்சை ரத்து செய்யப்பட்டதுடன். மாற்றியமைக்கப்பட்ட தாள்களுக்கான திகதி தாமதமாக அறிவிக்கப்படும் என்று தேர்வுகள் திணைக்களம் அறிவித்துள்ளது

(Visited 11 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்