மஹிந்த ராஜபக்ஷவின் மகனுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளாார்.
பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் வைத்து நேற்று முன்தினம், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டார்
கைது செய்யப்பட்ட யோஷித்த ராஜபக்ஷ பின்னர் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
சுமார் 4 மணித்தியால வாக்குமூல பதிவின் பின்னர் கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.
இந்தநிலையில், அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் அதன்போது உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.





