எதிர்மறை விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி? ; புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்திய சிரஞ்சீவி
சிரஞ்சீவி (Chiranjeevi) நடிப்பில் வெளியாகியுள்ள ‘மனசங்கர வரபிரசாத் காரு’ (Manasankara Varaprasad Garu) திரைப்படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்களைத் தவிர்க்க, படக்குழுவினர் எடுத்துள்ள அதிரடி முடிவு இந்தியத் திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
டிஜிட்டல் தளங்களில் படத்திற்கான ரேட்டிங் மற்றும் கருத்துகளைப் பகிர நீதிமன்றம் மூலம் படக்குழுவினர் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
டிக்கெட் முன்பதிவு தளங்களில் இதர நடிகர்களின் ரசிகர்கள் பதிவிடும் திட்டமிட்ட எதிர்மறை விமர்சனங்களைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda) உள்ளிட்ட பல நடிகர்கள் வரவேற்றுள்ள நிலையில், இது ஒரு புதிய முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.
இனி வரும் பெரிய நடிகர்களின் படங்களும் இதே பாணியைப் பின்பற்ற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.





