இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் குழந்தை பெற்றுக்கொள்வதனை தவிர்க்கும் தம்பதிகள் – பிறப்பு விகிதத்தில் பாரிய வீழ்ச்சி

இலங்கையில் குழந்தை பெற்றுக்கொள்வதனை பெண்கள் தவிர்த்து வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் இந்த நிலைமை இந்த நாட்டின் எதிர்காலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என குழந்தை மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

“2013ம் ஆண்டில் 350,000 இருந்த பிறப்புகள், 2024 ஆம் ஆண்டில் 228,000 ஆகக் குறைந்துள்ளது. அந்தக் குழந்தைகளில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

குழந்தைபருவ நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குழந்தைப் பருவப் புற்றுநோய் அதிகரித்துள்ளன. இது போன்று குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால், எதிர்காலம் நன்றாக இருக்காது.

இதைப் பற்றி நாம் அனைவரும் கவனமாக இல்லாவிட்டால், நாம் அனைவரும் கடினமான சூழ்நிலையை எதிர்நோக்க நேரிடும்” என்று குழந்தை மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!