சீனாவில் விபத்தில் உயிர்தப்பிய காதல் ஜோடிக்கு உடனடியாக திருமணம்

சீனாவைச் சேர்ந்த 31 வயது மா என்பவர் தனது காதலியுடன் கார் பயணத்தில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில், இருவரும் நூலிழையில் உயிர்தப்பிய நிலையில், உடனடியாக திருமணம் செய்துள்ளனர்.
விபத்து நிகழ்ந்தது அவர் ஒரு லொரியை முந்திச் செல்ல முயன்றபோது கார் தடுப்பில் மோதி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிராய்ப்புக் காயங்களுடன் மீட்கப்பட்ட மா மற்றும் அவரது காதலி, அந்த அனுபவம் அவர்களது வாழ்கையை ஆழமாக பாதித்ததாக கூறுகின்றனர்.
இருவரும் ஏற்கனவே திருமணத்தைப் பற்றி விவாதித்திருந்தாலும், இந்த அனுபவம் அவர்களை உடனடியாக முடிவெடுக்கத் தூண்டியது.
மா, “இருப்பதை நாம் மதிக்க வேண்டும். இருக்கை வாரை அணிவது உயிர்க்காக்கும்” எனக் கூறி, பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இந்த நற்செய்தி பெற்றோர்களுக்குப் பேரின்பத்தைத் தந்தது. “வாழ்விலும் தாழ்விலும் இணைபிரியாதவர்கள்” எனப் பெருமையாக கூறியுள்ளனர்.