பாகிஸ்தானில் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் – தம்பதியினர் சுட்டுக்கொலை!

குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டதற்காக ஒரு பெண்ணும் ஆணும் சுட்டுக் கொல்லப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, பாகிஸ்தானில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் காணப்படாத இந்த ஜோடி, கடந்த மாதம் பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ளூர் பழங்குடியினர் கவுன்சிலின் உத்தரவின் பேரில், கௌரவக் கொலை என்று அழைக்கப்படும் ஒரு வழக்கில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரியவருகிறது.
மாகாண முதல்வர் சர்ஃப்ராஸ் புக்டி, வீடியோவில் இடம்பெறும் மர்ம நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதனையடுத்து சிலமணி நேரங்களில் குறித்த 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று புக்தி கூறினார்.
(Visited 2 times, 1 visits today)