அமெரிக்காவில் 7 ஆண்டாக யுவதியை கூண்டில் அடைத்துத் துன்புறுத்திய தம்பதி

அமெரிக்காவில் நியூ ஜெர்சி மாநிலத்தில் யுவதியை கூண்டில் அடைத்துத் துன்புறுத்திய தம்பதி கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தற்போது 18 வயதான யுவதியை 7 ஆண்டாக அவ்வாறு துன்புறுத்தியதாக தம்பதி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக அரசாங்க வழக்கிறஞர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் அந்தப் பெண் தம்பதியிடமிருந்து தப்பினார்.
38 வயது பிரண்டா ஸ்பென்சரும் 41 வயது பிராண்டன் மோஸ்லியும் 2018ஆம் ஆண்டு முதல் தம்மைத் துன்புறுத்தியதாக அந்தப் பெண் கூறினார்.
அந்தப் பெண்ணின் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி அவர் வீட்டில் அடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இம்மாதம் 8ஆம் திகதி வீட்டிலிருந்து தப்பிய அந்தப் பெண் அண்டைவீட்டாரின் உதவியை நாடினார்.
வீட்டில் மிக மோசமான நிலையில் தாம் வைக்கப்பட்டிருந்ததாக அந்தப் பெண் அதிகாரிகளிடம் கூறினார்.
(Visited 32 times, 34 visits today)