பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடிகளால் பதற்றம்!

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இரு பயணிகள் பாலியல் உறவில் ஈடுபட்டு அங்கிருந்த பயணிகள் அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளனர்.
லண்டன் ஹீத்ரோவிலிருந்து டப்ளினுக்கு பயணத்தை மேற்கொண்ட விமானத்தில் இந்த அநாகரிகமான சம்பவம் பதிவாகியுள்ளது.
விமானத்தில் ஏராளமான குழந்தைகள் இருந்ததாகவும் குறித்த இருவரும் அநாகரிக்கமாக நடந்துகொண்ட சமயத்தில் குழந்தையொன்று அவர்களை கடந்துச் சென்றதாகவும் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள விமான நிறுவனம், விமானத்தில் உள்ள ஏதேனும் சிக்கல்கள் குறித்து ஊழியர்கள் தகவல் தெரிவிக்கவில்லை. ஆனால் அவர்கள் தகவலளித்திருந்தால், அதைத் தீர்க்க பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
(Visited 14 times, 1 visits today)