சிங்கப்பூரில் மர்மமான முறையில் தம்பதி உயிரிழப்பு – குழப்பத்தில் பொலிஸார்

சிங்கப்பூரில் மர்மமான முறையில் தம்பதியினர் உயிரிழந்துள்ளமை குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிளாக் 93 ஹென்டர்சன் சாலையில் அமைந்துள்ள ஹவுசிங் போர்டு குடியிருப்பில் இயற்கைக்கு மாறாக இந்த மரணம் நடந்துள்ளது.
70 வயது முதியவர் ஒருவர் கடந்த சனிக்கிழமை காலை ஒன்பதாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் மயக்க நிலையில் கிடந்துள்ளார். அதே வீட்டில் அவரது 67 வயது மனைவியின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் 70 வயது முதியவர், சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பின்னர் அவர் இறந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்கம்பக்கத்தினருக்கு துர்நாற்றம் வீசியதை அடுத்து அவர்கள் பொலிஸார் தகவல் கொடுத்துள்ளனர். மேலும் அந்த வீட்டிலின் தரையில் புழுக்கள் இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
அவரின் மனைவியின் மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என்று வகைப்படுத்தப்பட்டதாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.