சீனக் கடன் வலையில் சிக்கித் தவிக்கும் நாடுகள் – மாலைத்தீவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
சீனாவின் “One Belt – One Road” தொடர் திட்டத்தில் இணைந்த பல நாடுகள் தற்போது கடன் வலையில் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, அந்தத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட பல உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது தோல்வியடைந்ததாகவோ ஊடகச் செய்திகள் காட்டுகின்றன.
அதற்கு உதாரணமாக பாகிஸ்தான், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளை சுட்டிக்காட்ட முடியும் எனவும், சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ள நாடுகளில் ஆபிரிக்க பிராந்திய நாடுகளும் உள்ளதாகவும் ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதனிடையே, சீனாவின் கடன் வலையில் மாலைதீவுகளும் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படும் ஊடகச் செய்திகள், ஆட்சிக்கு வந்துள்ள மொஹமட் முய்சு என்ற சீன ஆதரவு ஆட்சியாளரின் அரசியல் கொள்கைகளே இதற்குக் காரணம் என்று கூறுகின்றன.
“One Belt – One Road” என்ற போர்வையில் மாலைத்தீவில் சீனா கட்டமைத்துள்ள தோல்வியுற்ற உள்கட்டமைப்பு, நாட்டின் பொருளாதாரம் மற்றும் கடன் சுமையின் மீது மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
சாலைகள், பாலங்கள், பயன்படுத்தப்படாத விமான நிலையங்கள் மற்றும் செயற்கைத் தீவுகள் மூலம் மாலைத்தீவுகள் சீனாவின் கடன் வலையில் சிக்கியிருப்பதாக உதாரணங்களைச் சொல்கிறது ஊடகங்கள்.
இதற்கிடையில், மொஹமட் முய்சுவின் ஆட்சியில் மாலைத்தீவு கருவூலம் நிதி நெருக்கடியில் இருப்பதாகத் தெரிவிக்கும் செய்தி அறிக்கைகள், தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக, காவல்துறையினரின் சம்பள உயர்வு போன்ற முக்கியமான சமூகப் பொறுப்புகளையும் மாலைதீவுகள் தாமதப்படுத்த வேண்டியிருந்தது.
உலக வங்கி அறிக்கைகளின்படி, மாலைத்தீவின் முன்னணி கடன் வழங்குனராக சீனா உள்ளது, மேலும் மாலத்தீவின் பொது வெளிநாட்டு கடனில் 42 சதவீதத்தை சீனா கொண்டுள்ளது.
இதன்படி, மாலைதீவு சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை சுமார் 1.37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும், 2026ஆம் ஆண்டுக்குள் சீனக் கடனையும் மாலைதீவு செலுத்த வேண்டியுள்ளது.
இதேவேளை, உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி மாலைதீவின் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை இந்த வருடத்தில் மாத்திரம் 550 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என வெளிநாட்டு ஊடகங்களும் தெரிவிக்கின்றன.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், கடன்களை ஒத்திவைத்தல் மற்றும் தள்ளுபடி செய்வது தொடர்பாக ஜனாதிபதி முகமது முய்சு பல தரப்பினரிடமிருந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் அதில், இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சீனாவுக்கு ஆதரவாக வந்த அதிபர் முயிசுவின் ஆட்சி இந்தியாவை மாலைத்தீவில் இருந்து விலக்கி வைத்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.