பிரித்தானியாவில் இன்று முதல் அதிகரிக்கப்படும் கடவுச்சீட்டு கட்டணம் – புதிய கட்டண விபரம்
பிரித்தானியாவில் புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டின் விலை 14 மாதங்களில் இரண்டாவது முறையாக மீண்டும் உயர்ந்துள்ளது.
இன்று முதல் வயது வந்தோருக்கான ஒன்லைன் கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான கட்டணம் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதற்கமைய விண்ணப்பிக்கும் கடவுச்சீட்டிற்காக இதுவரை 82.50 பவுண்ட் செலுத்தப்பட்ட நிலையில் 88.50 பவுண்ட் செலுத்த வேண்டும்.
14 மாதங்களில் இது இரண்டாவது அதிகரிப்பாகம். கடந்த வருடம் பெப்ரவரி மாதம் புதிய கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் 9 சதவிகிதம் உயர்த்தப்பட்டது.
ஆனால் இந்த கட்டண உயர்வால் திரட்டப்படும் நிதியானது கடவுச்சீட்டு சேவையை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்றே பிரித்தானிய உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று முதல் இணையமூடாக விண்ணப்பிக்கும் கடவுச்சீட்டுகளுக்கு 88.50 பவுண்டுகள் வசூலிக்கப்பட உள்ளது. சிறார்களுக்கு இணையமூடாக விண்ணப்பிக்க 57.50 பவுண்டுகள் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
தபால் மூலம் அனுப்பப்படும் காகிதப் படிவத்தின் மூலம் பயண ஆவணங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, வயது வந்தோருக்கான கடவுச்சீட்டிற்கு 93 பவுண்டில் இருந்து 100 பவுண்டாகவும், ஒரு சிறுவர்களுக்கு 64 பவுண்டிலிருந்து 69 ஆகவும் பவுண்டாக பெரிய அதிகரிப்பு ஏற்படவுள்ளது.
புதிய கட்டணங்கள் இந்த விண்ணப்பங்களின் வருமானம் கடவுச்சீட்டு மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளை வழங்குவதற்கான செலவை சிறப்பாகச் சந்திப்பதை உறுதிசெய்ய உதவும், மேலும் பொது வரிவிதிப்பிலிருந்து நிதியளிப்பதைக் குறைக்கும் என உள்துறை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.