ஜெர்மனியில் மீண்டும் வேகமாக அச்சுறுத்தும் கொரோனா – முகக் கவசம் அணியுமாறு கோரிக்கை
ஜெர்மனியில் தற்பொழுது கொரோனா தொற்றானது மிக வேகமாக பரவி வருவதாக தெரியவந்துள்ளது.
ஜேர்மனியில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர் அல்லது அடிப்படை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளனர். எனினும் தற்போது பரவல் நிலையின் வேகம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த கொரோனா தொற்று காரணமாக சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தமாக 7.9 மில்லியன் ஜெர்மனியர்கள் சுவாச கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக ரொபட்கொக் இன்ஸ்டிடியுட் என்று சொல்லப்படுகின்ற அமைப்பு வெளியிட்டுள்ள கருத்தின் படி இந்த விடயம் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, ஜெர்மனியின் 24 இவ்வகையான நோய் தொற்று உள்ளவர்களில் 24 சதவீதமானவர்கள் கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும்,
இந்நிலையில் 19 சதவீதமானவர்கள் றினோ வைரஜ் என்று சொல்லப்படுகின்ற இந்த சுவாச கோளாறு ஏற்படுத்துகின்ற வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளையில் ஜெர்மனியர்கள் முகம் கவசம் அணிவது நன்று என்ற கருத்தையும் நிபுணர்கள் முன்மொழிந்துள்ளார்கள்.
நோய் ஆபத்தானதாக இல்லாவிட்டாலும், அது பாரிய இடையூறுகளை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.