சான் பிரான்சிஸ்கோவில் கோப்பியால் ஏற்பட்ட சிக்கல் – வழக்கு தொடர்ந்த பெண்
சான் பிரான்சிஸ்கோ நகரில் கொதிக்கக் கொதிக்கக் கொடுக்கப்பட்ட கோப்பியால் தமக்குக் காயம் ஏற்பட்டதாகப் பெண் ஒருவர் McDonald’s மீது வழக்குத் தொடுத்துள்ளார்.
மேபல் சில்டரஸ் (Mable Childress) என்ற சூடான கோப்பி வாங்கினார். கோப்பிக் குவளை ஒழுங்காக மூடப்படாததால் காப்பி தம் மீது ஊற்றியதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
காப்பியைக் குடிக்க முயன்றபோது கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் சில்டரஸ் கூறினார். அதை அறிந்த உணவக ஊழியர்கள் அவருக்கு உதவியதாகக் கிளையின் உரிமையாளர் கூறினார்.
பெண்ணின் குற்றச்சாட்டுகளை நிறுவனம் பரிசீலிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1992ஆம் ஆண்டில் இதுபோன்ற வழக்கு McDonald’s மீது தொடுக்கப்பட்டது.
அப்போது வாடிக்கையாளருக்குச் சாதகமாகத் தீர்ப்பு அமைந்தது.





