கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் 43 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி கைது
கலிபோர்னியா நகரத்தில், அப்போது 38 வயது நிரம்பிய ஒரு நபர், ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து 59 முறை கத்தியால் குத்திய நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1982 ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் சன்னிவேலில் 15 வயது கரேன் ஸ்டிட்டை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், தற்போது 78 வயதான கேரி ராமிரெஸ் அடையாளம் காணப்பட்டு, டிஎன்ஏ ஆதாரங்களைப் பயன்படுத்தி நீதிக்கு கொண்டு வரப்பட்டார்.
நீதிபதி ஹான்லி சியூ அந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.





