பிரேசில் – அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையில் உரையாடல் – பேசப்பட்ட விடயம் வெளியானது
பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.
இரு நாட்டுத் தலைவர்களும் சுமார் 30 நிமிடங்கள் நீடித்த மிகவும் நட்புரீதியான தொலைபேசி உரையாடலை நடத்தியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரேசில் ஜனாதிபதி தனது நாட்டின் தயாரிப்புகள் மீது விதிக்கப்பட்ட வரிகளையும், அதிகாரிகளுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளையும் நீக்குமாறு அமெரிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி தனது சமூக ஊடகக் கணக்கில் ஒரு குறிப்பையும் வெளியிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசவும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 4 times, 1 visits today)





