ஜெர்மனியில் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 15 யூரோக்களாக அதிகரிப்பதில் சர்ச்சை

ஜெர்மனியில் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 15 யூரோக்களாக அதிகரிப்பது குறித்து அரசியல் கட்சிகளுக்கு இடையில் முறுகல் நிலை வெடித்துள்ளது.
பிரிட்ரிச் மெர்ட்ஸின் சமீபத்திய கருத்துக்களால் இந்த உயர்வு 2027ஆம் ஆண்டு வரை நடைமுறைக்கு வராது என தெரியவருகின்றது.
குறிப்பாக ஊதிய உயர்வுக்காக SPD வலுவாக பிரச்சாரம் செய்ததால் இந்த விடயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், CDU/CSU மற்றும் SPD இடையேயான கூட்டணி உடன்படிக்கையில் குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு கணக்கிடப்படும் என்பதற்கான தெளிவான சூத்திரம் ஏற்கனவே உள்ளதால், சர்ச்சை தேவையற்றதாகக் கருதப்படுகிறது.
2024 புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இந்தக் கணக்கீடு குறைந்தபட்ச ஊதியமாக சுமார் 15.04 யூரோக்களை பரிந்துரைக்கின்றது. இது SPD இன் கோரிக்கையுடன் ஒத்துப்போகிறது.
இந்தத் தெளிவு இருந்தபோதிலும், மெர்ட்ஸின் தற்போதைய கருத்துக்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளன.
பொருளாதார வல்லுநர்கள் அத்தகைய ஊதிய உயர்வின் பொருளாதார தாக்கத்தை விவாதித்து வருகின்றனர். எனினும், இந்த ஊதிய உயர்வு ஏற்கனவே பேச்சுவார்த்தைகளின் போது தீர்மானிக்கப்பட்டது.
புதிய அரசாங்கத்தின் முடிவுகளை பொதுமக்கள் எதிர்பார்க்கும் நிலையில், வாக்குறுதிகள் விவாதத்திலிருந்து நடைமுறைக்கு மாறவேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.