பிரான்ஸில் பெண் ஒருவருக்கு பொலிஸார் செய்த மோசமான செயலால் சர்ச்சை
பிரான்ஸில் யூத பெண் ஒருவரை தரையில் விழுத்தி கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
67 வயதுடைய யூத பெண்மணி ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். பொலிஸ் நிலையம் ஒன்றில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றதாக தகவல் வெளியிட்டுள்ளது.
காணொளி ஒன்றும் வெளியிட்டது. மேற்படி தாக்குதல் சம்பவம் காணொளியில் பதிவாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தற்போதே தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பெண், வீதி சமிக்ஞையினை மீறியும், பொலிஸாரின் கட்டுப்பாட்டை மீறியும் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைகளில் விலங்கிட்டு பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டிருந்த அவர் அங்கு வைத்தே தாக்கப்பட்டிருந்தார். அவரது தலையில் இருக்கும் விக் பொலிஸாரினால் நகைப்புக்கு உள்ளானதாகவும், அதனை பிடுங்கி எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை அடுத்து அப்பெண் பொலிஸார் மீது முறைப்பாடு செய்துள்ளார். அரச வழக்கறிஞர் அலுவலகம் வழக்கு பதிவு செய்துள்ளது.