ஜப்பான் விமானப் பயணத்திற்கு முன்பு மதுபானம் அருந்திய விமானியாக சர்ச்சை

ஜப்பானின் Peach Aviation நிறுவனத்தின் விமானத்தைச் செலுத்துவதற்கு முன் விமானி மதுபானம் அருந்தியதற்காக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விமானத்தை ஓட்டுவதற்குச் சுமார் 12 மணிநேரத்துக்கு முன்னர் மதுபானம் அருந்தக்கூடாது.
அந்த விதிமுறையை விமானி மீறியதாக Yomiuri Shimbun ஜப்பானிய ஊடகம் தெரிவித்தது. அவர் ஒரு லிட்டர் மதுபானம் குடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதனால் ஜப்பானின் போக்குவரத்துத்துறை Peach Aviation நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்தது.
விமானப் பயணத்துக்கு முன்னர் விமானி முறையான மதுபானச் சோதனையை மேற்கொள்ளவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டது.
அத்தகைய சம்பவங்கள் மீண்டும் நேராமல் இருக்க நிறுவனம் அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி ஜப்பானியப்
போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது.
(Visited 18 times, 1 visits today)