அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற கர்ப்பிணியை சிறையில் அடைத்த அதிகாரிகளால் சர்ச்சை
அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற 9 மாதக் கர்ப்பிணிப் பெண்ணை அதிகாரிகள் சிறையில் அடைத்த சம்பவம் பாரிய சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
ICE எனப்படும் குடிநுழைவு, சுங்கத்துறை நிறைமாதக் கர்ப்பிணி என்றபோதும் அவரைத் தடுத்து வைத்துள்ளது.
கேரி லோபெஸ் என்ற அந்த பெண்ணின் கணவர் ஆவணங்கள் இல்லாத குடியேறியாகும்.
கணவரைப் பாதுகாக்க அவர் அதிகாரிகளைத் தடுத்தார். எனவே அவர் தடுக்கப்பட்டார் என்று அதிகாரிகள் கூறினர்.
லோபெஸும் அதிகாரிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது காணொளியாக எடுக்கப்பட்டது. அவர் இப்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
உடனே அவர் விரைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடைய நலனையும் பிறக்கவிருக்கும் குழந்தையின் நலனையும் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.





