முத்தையா முரளிதரனின் நிறுவனத்துக்கு நிலம் வழங்கியமை தொடர்பில் சர்ச்சை

இலங்கை அணியின் முன்னாள் கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரனின் சிலோன் பெவரேஜர்ஸ் நிறுவனத்துக்கு காஷ்மீரில் 25 ஏக்கர் நிலம் இலவசமாக ஒதுக்கப்பட்டுள்ளமை குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முகமட் யூசுவ் தரிகாமி இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர், “ஒரு பைசா கூட பெறாமல் இலங்கையின் முன்னாள் வீரருக்கு நிலம் ஒதுக்கப்படுவது எவ்வாறு சாத்தியமானது?” -என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்தப் பரப்புரையில், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குலாம் அஹமட் இச்சட்டத்தை பாரதூரமானதாகக் கருதி சட்டசபையில் இதை விவாதிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
(Visited 16 times, 1 visits today)