சிங்கப்பூரில் சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளியால் சர்ச்சை!

சிங்கப்பூரில் அண்மையில் வெளியான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகக் பகிரப்படுகிறது.
ITE College Centralஇல் இளைஞர்களை துன்புறுத்துவதைக் காட்டும் வகையில் இந்த காணொளி அமைந்துள்ளது.
காணொளியில் இளைஞர்கள் சிலரை எட்டி உதைப்பதையும் அடித்துக் கேலி செய்வதையும் காண முடிகிறது.
அதனைச் சிலர் வேடிக்கை பார்ப்பதையும் காணலாம். சிலர் ஒருபடி மேல் போய் அதனைப் படம் பிடித்திருக்கின்றனர்.
வேறு சிலர் அதனைத் தடுத்து நிறுத்தாமல் கூச்சலிட்டுத் துன்புறுத்துவோருக்கு உற்சாகம் அளித்திருந்தனர்.
அந்தக் காணொளிகள் எப்போது எடுக்கப்பட்டன எனும் விவரம் தெரியவில்லை. சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
(Visited 16 times, 1 visits today)