அரசியல் இலங்கை செய்தி

சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்: மன்னிப்பு கோருமாறு அழுத்தம்!

மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அமைச்சர் கே.டி. லால்காந்தK.D. Lalkantha , உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசி அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியவை வருமாறு,

“மிகிந்தலை தலைமை விகாராதிபதிமீது தரக்குறைவான வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டு அமைச்சர் லால்காந்த விமர்சித்துள்ளார்.

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் சுதந்திரம் மிகிந்தலை தேரருக்கு இருக்கின்றது. எனினும், குற்றச்சாட்டுகளை தாங்கிக்கொள்ள முடியாமல், மகா சங்கத்தினரை படு மோசமாக விமர்சிப்பது ஏற்புடையது அல்ல.

இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். தான் வெளியிட்ட கருத்தை அமைச்சர் மீளப்பெற வேண்டும். மிகிந்தலை தேரர் உட்பட மகாசங்கத்தினரிடம் அமைச்சர் லால்காந்த மன்னிப்பு கோர வேண்டும்..” – என்றார்

அதேவேளை, அமைச்சர் லால்காந்தவுக்கு எதிராக அரசியல் களத்தில் எதிர்ப்பு வலுத்துள்ளது. சில பௌத்த தேரர்களும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!