அமெரிக்க வெளியுறவுக்கொள்கையின் சர்ச்சை மனிதர் தன்100ஆவது வயதில் காலமானார்!

அமெரிக்காவின் முன்னாள் பிரபல இராஜாங்க செயலாளர் ஹென்றி ஹிசிஞ்சர் Henry Kissinger, தனது 100 ஆவது வயதில் காலமானார்.
ஹிசிஞ்சர் நிக்சன் போர்ட் அரசாங்கங்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இராஜாங்க செயலாளராகவும் பணியாற்றியிருந்தார்.
அமெரிக்க வெளிவிவகார பாதுகாப்பு கொள்கைகளில் முக்கியமான சர்ச்சைக்குரிய பங்களிப்பை அவர் வழங்கியிருந்தார்.
1923 ம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்த ஹிசிஞ்சர் அவரது குடும்பத்தினர் ஜேர்மனியிலிருந்து தப்பியோடியவேளை அமெரிக்காவிற்கு சென்றார்.
1943இல் அமெரிக்க பிரஜையான அவர் பின்னர் அமெரிக்க இராணுவத்திலும் புலனாய்வு பிரிவிலும் பணியாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 13 times, 1 visits today)