இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் மழை – இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் மழையை கருத்தில் கொண்டு, இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, பதுளை மாவட்டத்தில் கண்டகெட்டிய, பசறை, ஹாலிஎல, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, ஊவா பரணகம மற்றும் சொரணதொட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று மதியம் 12.30 மணி முதல் நாளை மதியம் 12.30 மணி வரை அமலில் இருக்கும் என்றும் அந்த அமைப்பு தொடர்புடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(Visited 3 times, 3 visits today)