தொடரும் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் : இழுபறியில் போர் நிறுத்தம்!
உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைகள் இந்த வாரமும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு “100 சதவீதம் தயாராக” இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் உக்ரைனுக்கு முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் மற்றும் உக்ரைன் பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் அந்நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov) பேச்சுவார்த்தைகளை ஆக்கபூர்வமானவை என்று விவரித்துள்ளதுடன், ரஷ்யாவின் முந்தைய கோரிக்கைகளை மீளவும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.





