செய்தி மத்திய கிழக்கு

காஸாவில் தொடரும் போர் – சவுதி அரேபியா விடுத்த எச்சரிக்கை

காஸாவில் தொடரும் போரால் அனைத்துலகப் பொருளாதார பின்னடைவைச் சந்திக்கும் என்று சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறப்பு உலகப் பொருளியல் கருத்தரங்கைத் தொடங்கிவைத்து சவுதி அரேபியா அந்தக் கருத்துகளை முன்வைத்தது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன், பாலஸ்தீன வட்டாரத் தலைவர்கள், சண்டைநிறுத்த உடன்பாட்டை எட்ட முயற்சி செய்யும் பல்வேறு நாடுகளின் அதிகாரிகள் முதலானோர் மாநாட்டில் கலந்துக்கொள்கின்றனர்.

இரண்டு நாள்கள் இடம்பெறும் கூட்டங்களில் காஸாவிலும் உக்ரேனிலும் நிலவும் போர்களைப் பற்றிக் கலந்துரையாடப்படும். மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று இஸ்ரேல் கூறியது.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூவை வரும் செவ்வாய்க்கிழமை பிளிங்கன் சந்திக்கவுள்ளார்.

ராஃபா பகுதியில் தரைத் தாக்குதல் நடத்தும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டாம் என நெட்டன்யாஹூவிடம் பிளிங்கன் கேட்டுக்கொள்வார்.

(Visited 20 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி