சூடானின் வான்வெளியை தொடர்ந்து மூட நடவடிக்கை!
சூடான் அதிகாரிகள் தங்கள் வான்வெளியை மூடுவதை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏப்ரல் நடுப்பகுதியில் சூடான் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்ததை அடுத்து சூடானின் வான்வெளியின் சாதாரண போக்குவரத்துக்கு மூடப்பட்டது.
இதன்படி, ஆகஸ்டு 15ஆம் திகதி வரை வான்வெளி மூடல் காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், மனிதாபிமான உதவி மற்றும் வெளியேற்ற விமானங்கள் தொடர்ந்து இயங்கும் என்று சூடான் அதிகாரிகள் கூறியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் கூறுகின்றன.
(Visited 7 times, 1 visits today)