மிசோரத்தில் கட்டுமானப் பணியின்போது விபத்து – 17 பேர் பலி!
இந்தியாவின் மிசோரமில் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த போது 35 முதல் 40 தொழிலாளர்கள் இருந்ததாகவும் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே மீட்பு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.
இறந்தவர்களுக்கு 2 லட்சம் இந்திய ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 இந்திய ரூபாயும் வழங்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அறிவித்துள்ளார்.





