முர்து பெர்னாண்டோவை பிரதம நீதியரசராக நியமிக்க அரசியலமைப்பு சபை அங்கீகாரம்

இலங்கையின் பிரதம நீதியரசராக நீதியரசர் முர்து நிருபா பிதுஷினி பெர்னாண்டோவை நியமிப்பதற்கான பரிந்துரையை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது.
மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (15) இரவு நடைபெற்ற அரசியலமைப்பு பேரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முர்து பெர்னாண்டோவை நியமிப்பதற்கான பரிந்துரை ஜனாதிபதியினால் அரசியலமைப்பு சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிருபா பிதுஷினி பெர்னாண்டோ கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
(Visited 46 times, 1 visits today)