ஐரோப்பா

ஜெர்மனியின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் மெர்ஸ்

ஜெர்மனியின் பிரதமராக கன்சர்வேட்டிவ் (பழமைவாத) கட்சியின் ஃபிரெட்ரிக் மெர்ஸ் செவ்வாய்க்கிழமை (மே 6) பொறுப்பேற்கிறார்.

போருக்குப் பிந்தைய வீழ்ச்சியிலிருந்து நீண்ட காலமாகப் போராடும் பொருளியல், உயர்மட்ட பாதுகாப்புக்கான நட்பு நாடான அமெரிக்காவுடன் உறவு பாதிப்பு, தீவிர வலதுசாரி எழுச்சி என்று சவால்கள் நிறைந்த ஜெர்மனியின் முக்கியமான காலகட்டத்தில் அவர் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளார்.

பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் அவரது எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, ஆட்சி அமைக்க மத்திய-இடதுசாரி சமூக ஜனநாயக கட்சியினர் கூட்டணி ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர்.

மெர்ஸை தேர்ந்தெடுப்பதற்காக செவ்வாய்க்கிழமை கூடும் நாடாளுமன்றத்தில் அவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ஓலாஃப் ஷோல்சின் தலைமையிலான மூன்று வழி கூட்டணி உடைந்ததையடுத்து கடந்த நவம்பர் மாதம் அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது. அது அங்கு அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்திய நிலையில், தலைமைத்துவத்தை வெளிப்படுத்த மெர்சுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இறக்குமதி வரிகளால் ஏற்பட்ட உலகளாவிய வர்த்தகப் போர், ஏற்கெனவே தொடர் வீழ்ச்சி கண்டுவரும் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளியலான ஜெர்மனிக்கு மேலும் அச்சுறுத்தலாகி உள்ளது.

2022ல் உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பினால் மலிவான ரஷ்ய எரிவாயு இறக்குமதியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியிருந்தது. சீனாவினால் ஏற்பட்டுள்ள போட்டி அதன் பொருளியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மன் கூட்டணி ஒப்பந்தம், பெருநிறுவன வரியைக் குறைத்தல், எரிசக்தி விலைகளைக் குறைத்தல் போன்ற வளர்ச்சிக்கான திட்டங்களைக் கொண்டுள்ளது. உக்ரேனுக்கு வலுவான ஆதரவைத் தெரிவிப்பதுடன் அதிக ராணுவ செலவினங்களையும் மேற்கொள்ள ஒப்பந்தம் உறுதியளிக்கிறது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு 1989ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட, பழம்பெரும் அரசியல்வாதி என்றாலும், மெர்ஸ் ஒருபோதும் அரசாங்க பதவியை வகித்ததில்லை என்பதால் நிர்வாகத்தில் அவர் தன் முத்திரையைப் பதிக்க வேண்டும்.

2002ல் ஏஞ்சலா மெர்க்கலிடம் கட்சி அதிகாரப் போராட்டத்தில் தோற்ற பின்னர், பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தனியார் துறையில் பணியாற்றினார் மெர்ஸ். வசதிபடைத்த, கத்தோலிக்க மேற்கு ஜெர்மன் வழக்கறிஞரான அவர், பொழுதுபோக்கு விமானியும் ஆவார்.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!