ராமர் கோயில் பிரதிஷ்டை : அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு, அதன் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன
ராமர் கோயிலின் மூலவர் பிரதிஷ்டை விழா வரும் 22-ஆம் திகதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநில அரசு ராமர் கோயிலின் மூலவர் பிரதிஷ்டை செய்யப்படும் நாளான ஜனவரி 22 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
கோயில் திறப்பு விழா நாளன்று அம்மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 25,000 ஹிந்து மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக 10,000 பேர் பங்கேற்க உள்ளனர்.
மேலும், இதனை ‘தேசிய விழா’ என்று குறிப்பிட்டுள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜனவரி 22-ம் திகதி மது விற்பனைக்கும் தடை விதித்துள்ளார்.