இலங்கையில் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் – உயிரை காப்பாற்ற போராடும் பெற்றோர்
இணைந்து பிறந்த இரண்டு பெண் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் சவாலை எதிர்நோக்கும் பெற்றோர் தம்பதிகள் குறித்து அரநாயக்கவில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு சிறுமிகளுக்கும் இரண்டு சிறுநீரகங்கள் மட்டுமே உள்ளன, மேலும் 4 வயதை அடைவதற்குள் இரண்டு சிறுநீரகங்களையும் தனித்தனியாக மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
ஆனால், பிறக்கும்போதே இரண்டு குழந்தைகளும் இடுப்பு பகுதியில் ஒட்டிப்பிறந்துள்ளனர்
மேலும், இருவருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் மட்டுமே உள்ளதால், அவர்களின் உயிருக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த இரு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற 4 வயதை அடையும் முன் அவர்களின் சிறுநீரகங்களை தனித்தனியாக மாற்ற வேண்டும்.
இந்த இரண்டு சிறுமிகளுக்கும் தற்போது 3 வயது ஆன போதிலும், பெற்றோரின் கடும் பொருளாதார நெருக்கடியால் இவர்களால் இது வரை அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை.
இரண்டு சிறுமிகளின் உயிரைக் காப்பாற்ற, உதவி தருமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.