இந்தியா

(NEW UPDATE) இந்திய மக்களவை தேர்தல் 2024 : வாரணாசியில் மீண்டும் வெற்றிவாகை சூடிய மோடி!

வாரணாசியில் பாஜக வேட்பாளர் மோடி 6,12,970 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 1,52513 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.

பிரபல நடிகரை புறக்கணித்து நோட்டாவுக்கு வாக்களித்த மக்கள்!

2 -வது முறையாக மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் தஞ்சையில் திமுக வேட்பாளர் முரசொலி வெற்றி பெற்றுள்ளார்.

அத்துடன் தென்காசி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 7-வது முறையாக போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி.

திண்டுக்கல்லில் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் வெற்றி. 6,16,559 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 71,698 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதுடன், பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் தோல்வியை தழுவியுள்ளார்.

மேலும் திருவனந்தபுரம் தொகுதியில் ஒன்றிய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை வீழ்த்தி, காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் வெற்றி பெற்றுள்ளார். 4-வது முறையாக திருவனந்தபுரத்தில் இருந்து எம்.பியாக தேர்வாகிறார்.

விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பெர்ட் 60% வாக்குகளுடன் வெற்றி முகத்தில் உள்ளார். அந்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுகக கட்சி நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை வேலூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகானை விட நோட்டா அதிக வாக்குகள் பெற்றுள்ளது. 11 சுற்றுகள் முடிவில் NOTAவுக்கு 4,712 வாக்குகளும், நடிகர் மன்சூர் அலிகானுக்கு 1,583 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

மாநில காங்கிரஸ் தலைவரும் 25 ஆண்டுகளாக அத்தொகுதியில் எம்பியாக இருந்தவருமான அதிர் ரஞ்சன் சவுத்ரியை வீழ்த்தினார்.

மேற்குவங்கத்தின் பஹரம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் வெற்றி பெற்றுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி வெற்றி பெற்றுள்ளார்.

தனிப் பெரும்பான்மையை இழந்த மோடி!

மக்களவையில் தனிப்பெருமான்மையை இழந்துள்ளதால் மோடி பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

400 இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறிய மோடி 300 இடங்களை வரை கூட வெல்லமுடியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் தி.மு.க முன்னிலை!

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், அவரது சொந்த தொகுதியான மண்ணாடிப்பட்டில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை விட 595 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார்.

உத்திரப்பிரதேசம் அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி தோல்வி முகம். காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் ஷர்மா 1,18,471 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 828 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்துள்ளார்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் 87,716 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி முன்னிலையில் உள்ளார்.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியை பிடித்தார்!

ஜலந்தர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சரஞ்சித் சிங் சன்னி 3,90,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளரை விட 1,75,993 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடகாவின் சித்திரதுர்கா தொகுதியில் பாஜக வேட்பாளர் கோவிந்த் மக்தப்பா கர்ஜோல் 6,84,890 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவர் காங்கிரஸ் வேட்பாளரை விட 48121 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் மஞ்சு சர்மா 8,86,850 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவர் காங்கிரஸ் வேட்பாளரை விட 3,31,767 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோல் ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் 87,716 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி முன்னிலை வகிக்கிறார்.

தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 828 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

100 தொகுதிகளில் முன்னணியில் உள்ள காங்கிரஸ் கட்சி!

இந்திய மக்கள் அவை தேர்தலின் முடிவுகள் வெளியாகி வருகின்ற நிலையில், சண்டிகரில் காங்கிரஸ் கட்சி முன்னணியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அங்கு போட்டியிட்ட மணீஸ் திவாரி, கிட்டத்தட்ட 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் என்று தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய ECI போக்குகளின்படி, திவாரி பாஜக போட்டியாளரான சஞ்சய் டாண்டனை விட 4,991 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் ரிது சிங் 5,000 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.

சண்டிகரில் உள்ள ஒரே நாடாளுமன்றத் தொகுதியில் இந்தத் தேர்தலில் 62.80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதேவேளை காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் 100 தொகுதிகளில் முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் 02 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ள குமாரசாமி!

கர்நாடக மாநிலம் மாண்டியா மக்களவைத் தொகுதியில் ஜனதா தளம் (மதச்சார்பற்ற) குமாரசாமி 8,45,769 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவர் 2,82,056 வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி 2024 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வேட்பாளராகப் போட்டியிட்டார்.

தமிழகத்தில் பா.ஜ.க பெற்றுக்கொண்ட இடம்!

மதியம் 1.35 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 10.52 சதவீதம் வாக்குகளை பா.ஜ.க பெற்றுள்ளது.

(Visited 11 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content