இலங்கை

இலங்கைக்கு அளிக்கவிருக்கும் தலைமைத்துவத்துக்கும் வாழ்த்துக்கள் – அநுரவை பாராட்டிய ரிஷாட்

அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி நாட்டு மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதாகச் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஒருமைப்பாட்டையும், அபிவிருத்தியையும் ஊக்குவிப்பதன் ஊடாக மக்கள் வழங்கிய ஆணையை அவர் ஈடேற்றுவார் எனத் தாம் நம்புவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலின் முதலாவது வாக்குகள் எண்ணப்பட்டு வெளியான முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையிலிருந்த வேளையில், அவரது வெற்றிக்கு வாழ்த்துக்கூறி தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றைச் செய்த ரிஷாட் பதியுதீன்,

அப்பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

‘இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி நாட்டு மக்களின் அபிலாஷைகளின் வெளிப்பாடாகும். நாட்டு மக்களுக்கு இடையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதுடன், அபிவிருத்தியை ஊக்குவிப்பதன் ஊடாக மக்கள் உங்களுக்கு வழங்கிய ஆணையை உரியவாறு ஈடேற்றுவீர்கள் என நாம் நம்புகின்றோம். உங்களது வெற்றிக்கும், நீங்கள் அளிக்கவிருக்கும் தலைமைத்துவத்துக்கும் வாழ்த்துக்கள்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!